மும்பை செம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப், பர்கா அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை விசாரணையைத் தொடங்குகிறது.
ஏற்கெனவே தனியார் கல்லூரியின் இந்தத் தடை உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், வழக்கை நாளை விசாரணைக்குப் பட்டியலிட்டார்.