மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வீட்டில் சுவர் இடிந்த விழுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சீர்காழியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், குமர கோவில் தெருவில் வசிக்கும் நாராயணமூர்த்தி என்பவரின் வீட்டின் மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்தன. இதனால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த நாராயணமூர்த்தியின் மனைவி உள்ளிட்ட 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.