திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைசேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் பள்ளியில் ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டதாகவும் , பணியில் இருக்கும் ஆசிரியரும் முறையாக பள்ளிக்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பொதுமக்களும் மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.