உத்தரபிரதேசத்தில் கனமழை எதிரொலியாக கங்கை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
பல்லியா, லக்கிம்பூர் கேரி, பரூகாபாத், சீதாபூர், பிஜ்னோர் மற்றும் பாரபங்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், கான்பூர் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். கங்கை ஆற்றிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் படகுகள் இயக்கப்படாமல் உள்ளன.