சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இரண்டாம் நாளாக சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.