மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் போக்குவரத்து பராமரிப்பு பணிக்காக வரும் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக 3 முறை மண் சரிந்து தண்டவாளம் சேதமானதால் ரயில் போக்குவரத்து தடைபட்டது.இதனால் பராமரிப்பு பணி காரணமாக மலை ரயில் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.