ராமநாதபுரத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் மற்றும் மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானையை சேர்ந்த ராஜநாதன், புதிய மின் இணைப்பு வேண்டி கடலாடி மின்வாரியத்தை அணுகியுள்ளார்.
அப்போது பணியில் இருந்த உதவி பொறியாளர் கணேஷ்குமார் மற்றும் மின்வாரிய வணிக ஆய்வாளர் முத்துவேல் ஆகியோர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஜநாதன் புகாரளித்ததையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை கணேஷ்குமாரிடம் கொடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்பேரில் ராஜநாதனிடம் இருந்து பணத்தை பெற்றபோது இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.