இயக்குநர் சீனு ராமசாமியின் “நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்” நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தன் வாழ்க்கையில் வந்த ஆசான்களில் இயக்குநர் சீனு ராமசாமி முக்கியமானவர் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ர்ந்து பேசிய சீனு ராமசாமி, நலிந்த திரைக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் நலிந்த பதிப்பாளருக்கும் அரசு மானியம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.