நீலகிரியில் மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் தொடர்பாக புவியியல் வல்லுநர்கள் அறிக்கை வழங்கியபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
உதகையில் உள்ள ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின், பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் இடிபாடுகள் ஏற்பட்டால் வெளியேறுவது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா,
மாவட்டம் முழுவதும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆய்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.