ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தனியார் பள்ளி தாளாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனையறிந்த போலீசார் அவரது குடும்பத்தினருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி கடிதம் அனுப்பிய நபரை தேடி வந்தனர்.
இதில் தனியார் பள்ளி தாளாளராக இருக்கும் அருண்ராஜ் என்பவர் கடிதம் அனுப்பியதும், அவர் தனது பள்ளியில் பணிபுரிந்த சதீஷ்குமார் என்பவரை பழிவாங்க இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.