திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோயிலின் அருகே 12 கடைகள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன.
பல வருடங்களாக அமைந்துள்ள இந்த கட்டிடங்கள் கோயிலுக்கு சொந்தமானவை எனவும் இவற்றை அகற்றக்கோரியும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகும் இடங்களை காலி செய்யாததால் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.