ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வயல்வெளியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த 4 கறவை மாடுகள் உயிரிழந்தன.
தாஜ்புரா பகுதியில் உள்ள வயல்வெளியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான நான்கு கறவை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது மழையின் காரணமாக வயல்வெளியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகளும் உயிரிழந்தன.