நாடு முழுவதும் உள்ள அனைத்து பெரிய துறைமுகங்களிலும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளதாக துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
HMS, CITU, உள்ளிட்ட துறைமுக தொழிற்சங்கங்கள் அடங்கிய தேசிய துறைமுக தொழிலாளர்களின் கூட்டமைப்பு கூட்டம் தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
HMS தலைவர்கள் பி.எம்.முகமது ஹனீப், ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்கள் துறைமுகம் சத்யா, தாமஸ் செபாஸ்டின் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.