தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் ‘டபுள் iSmart’ படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கவுள்ளார்.
பூரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்து வெற்றி பெற்ற ‘iSmart சங்கர்’ படத்தின் 2-ம் பாகமாக ‘டபுள் iSmart’ திரைப்படம் உருவாகி வருகிறது.
தென்னிந்திய திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடிப்பது தனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாகவும், வில்லனாக நடிப்பதால் சவால் மிகுந்த சண்டை காட்சிகளில் நடிக்க முடிவதாகவும் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.