மும்பை செம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப், பர்கா அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்லூரி நிர்வாக உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே தனியார் கல்லூரியின் இந்த உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மாணவர்கள் தாங்கள் அணிய வேண்டிய உடையை தேர்வு செய்யும் உரிமை இருப்பதாக கூறி, கல்லூரி நிர்வாக உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.