அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், ஜனநாயக கடசியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்து கணக்கெடுப்பில் கமலா ஹாரிஸ் 42 சதவீதம் ஆதரவையும், ட்ரம்ப் 37 சதவீதம் ஆதரவையும் பெற்றுள்ளார். 2020 அதிபர் தேர்தலில், இரு கட்சிக்கும் இடையே குறைந்த வாக்கு வித்தியாசம் இருந்த 7 மாநிலங்களிலும், ட்ரம்ப்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.