அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் போட்டியிட தயாராக உள்ளதாக, முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 10-ம் தேதியன்று ABC தொலைக்காட்சியில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ட்ரம்ப் உடனான விவாதத்தின்போது அதிபர் ஜோ பைடன் தெளிவற்ற முறையில் பேசியதால் எழுந்த விமர்சனங்களால், அவர் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.