வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள், அந்நாட்டிலிருந்து வெளியேறும் விதமாக இந்திய- வங்கதேச எல்லையில் திரண்டனர்.
இந்தியாவுக்குள் வர முயன்ற அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார், சிதால்குச்சி, பதான்துலி பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், வங்கதேச எல்லையில் ஏராளமானோர் திரண்டிருப்பது பதிவாகியுள்ளது.