“பங்களாதேஷில் ஹிந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களை பங்களாதேஷின் இடைக்கால அரசு உடனடியாக தடுக்க வேண்டும்” என ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேட்கர் வலியுறுத்தியுள்ளார்.
ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபல்லே வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, சுனில் அம்பேட்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசியவர்,
“பங்களாதேஷில் கடந்த சில தினங்களாக ஹிந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கிறது” எனவும், “ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்கள் மீதான வன்முறை மற்றும் திட்டமிட்ட கொலை, சொத்துக்களை சூறையாடுவது உள்ளிட்ட சம்பவங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், “இந்த இக்கட்டான சமயத்தில், உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அனைவரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என சுனில் அம்பேட்கர் கேட்டுக் கொண்டார்.