பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் இருந்து 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு வியோபாஸ் என்ற விமானம் சென்றது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது.
வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது விழுந்த விமானம் சில நொடிகளில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்ட 62 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு சென்ற மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.