மதுரையில் பெய்த கனமழை காரணமாக வடகரை – வைகை ஆற்று சாலையை வெள்ளம் சூழ்ந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மதுரையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் மழை பெய்தது.
அண்ணாநகர், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் வடகரை – வைகை ஆற்று சாலை மழை நீரில் மூழ்கியது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.