சிவகங்கையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு நாட்டரசன்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத தனது 14 வயது மகளுக்கு தையல் கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தையல் கடைக்காரர் கண்ணன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, கண்ணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.