கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த 3 குழந்தைகளை நேரில் அழைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் தாய் மற்றும் தந்தையை இழந்த கோகிலா, ஹரிஷ் மற்றும் ராகவன் ஆகிய 3 குழந்தைகளுக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தைகளை நேரில் அழைத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர் ஆகியோர் அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.