நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வயநாடு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இந்திய முகவர்கள் சங்கம் மற்றும் இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்திருந்த அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனங்களை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பொருட்கள் விரைவில் வயநாட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.