மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
வள்ளுவக்குடியில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்புறம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த அடுக்கி வைத்தனர்.
கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மழையின் காரணமாக சுமார் ஆயிரத்து 500 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.