விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இப்பள்ளியில் 5 முதல் 10-ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந் நிலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து புகாரளித்தும் மழைநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.