கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பயிற்சி ஆசிரியர் கம்பால் தாக்கியதில் காயமடைந்த 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தக்கலையை சேர்ந்த சதீஷின் 5 வயது மகள் சாதனா, எதிர்வீட்டில் உள்ள நிஷா என்பவரிடம் டியூஷன் சென்று வருகிறார். இந்நிலையில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சாதனா, உடம்பு வலிப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்போது குழந்தையின் முதுகில் ரத்த காயம் இருப்பதை கண்ட பெற்றோர், இதுகுறித்து விசாரித்தபோது நிஷா மற்றும் அவரது தாயார் கம்பால் தாக்கியதாக சிறுமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சதீஷ் புகாரளித்த நிலையில் தலைமறைவாக உள்ள தாயையும், மகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.