ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நாகேந்திரன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனின் பெயரும் சேர்க்கப்பட்டதையடுத்து அவரை கைது செய்வதற்கான ஆணையை செம்பியம் போலீசார், சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து கைது ஆணையை நாகேந்திரனிடம் கொடுத்தபோது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.