நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை மாநகராட்சியின் 7வது மேயராக திமுகவை சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் என்ற கிட்டு பதவியேற்று கொண்டார்.
அவருக்கு மாநகராட்சி ஆணையர் சுக புத்திரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய மேயராக பதியேற்று கொண்ட ராமகிருஷ்ணனுக்கு மாநகராட்சி ஆணையர் செங்கோல் வழங்கினார். ராமகிருஷ்ணனின் தாய் மரகதம்மாள் அவருக்கு மேயர் அணியும் அங்கியை வழங்கினார். மாமன்ற கூட்டத்திற்கு சைக்களில் வலம் வரும் ராமகிருஷ்ணன், பதவியேற்பு விழாவிற்கும் சைக்கிளில் வந்தது குறிப்பிடத்தக்கது.