வேலூரில் பெண் சார் பதிவாளர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார் பதிவாளராக உள்ள கவிதா, பத்திரப் பதிவு செய்ய புரோக்கர் ஒருவரிடம் லஞ்சமாக பணம் வாங்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், “ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டோம்.
இதில் 75 உள்ளது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்” என சார்பதிவாளரிடம் புரோக்கர் பேசுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தியதில், சார் பதிவாளர் கவிதா முறைகேடாக பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கியது உறுதியானது.
இதையடுத்து, சார் பதிவாளர் கவிதாவை, பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.