தமிழக பாஜக 2026 -ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் வருங்கால தலைமுறையினர் தொழில் முனைவோர் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
இந்தியாவில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது இதற்கு ஜிஎஸ்டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும்.
2024ம் ஆண்டு காலாண்டு பகுதியில் மஹாஷ்டிரா 15%கர்நாடக9% ஆகிய மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு 3.3% மட்டுமேவளர்ந்து உள்ளது என்றார்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தை விட தமிழகம் பின்தங்கி உள்ளது.
திமுக அரசு இதனை கவனிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஜிஎஸ்டி மாநில வருவாய் மைனஸ் பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி சென்று கொண்டு உள்ளது என்றார்.
இதனால் தொழில் முனைவோருக்கு போதுமான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தினார்.
தொழில் முனைவோர் எங்கே சலுகை கிடைக்கிறதோ அங்கு செல்வார்கள் அதனால் மத்தியப்பிரதேச முதல்வருடன் நான்கு பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் வந்தனர் ஆனால் இது போன்ற தமிழகத்தில் ஏன் நடக்கவில்லை. அதை தவிர்த்து மற்ற மாநிலத்தை பார்த்து பிரம்மிப்பு அடையும் வகையில் தான் தமிழகத்தின் நிலை உள்ளது என்றார்.
தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழில் முனைவோர் முதல்வரை நேரடியாக பார்க்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வங்காளதேசத்தில் உள்ள பிரச்சினை பயன்படுத்தி தொழில் முனைவோரை தமிழகம் நோக்கி அழைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மாநிலத்தின் பொருளாதார பெருக்கல் நடவடிக்கை முதல்வர் எடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.
தமிழக பாஜக 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்காக நாளை முதல் திருப்பூரில் முதல் கூட்டம் தொடங்க உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் கால தாமாகி வருகிறது. எத்தனை முறை காலதாமதம் செய்வது.
அமைச்சர் முத்துசாமி தேதி முடிவு செய்யட்டும், தேதி அறிவிக்காத நிலையில் அமைச்சர் முத்துசாமி பேச்சை எப்படி நம்புவது. இந்த மாதம் இறுதிக்குள் திட்டம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் முத்துசாமி சொல்லுவது, திட்டம் தொடங்குவதற்கு முதல்வரிடம் அமைச்சர் தேதி வாங்கிவிட்டாரா என கேள்வி எழுப்பினார்.
தேதி அறிவித்தால் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் கைவிட பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறினார். திமுகவில் 40ஆண்டுகளுக்கு நிரந்தர தலைவர், பொதுச்செயலாளர் போன்று பாஜகவில் இல்லை.
பாஜக கட்சி தலைவர் இல்லாத போதும் மற்ற தலைவர்கள் கட்சி பணிகளை கவனிப்பார்கள். பாஜகவின் தற்போதைய கூட்டணி ஆட்சியை முன்வைத்து தான் கூட்டணி அமைத்தோம். தமிழகத்தில் 70ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி என பேச்சு எழுந்ததுள்ளது. கூட்டணி க்குள் யார் வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
2026ம் ஆண்டு நான்குமுனை போட்டி இருக்கும், எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள் வெற்றி பெற முடியும் என்றார். வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் அப்போது தான் மக்களுக்கு யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்ற வாய்ப்பு இருக்கும். தமிழக அரசியல் 2026ம் ஆண்டு தேர்தலில் அடியோடு மாறும்.
தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்கு சதவிகிதம் உயரவில்லை என்றால் கட்சி எங்காவது தவறு செய்கிறது என்று தான் அர்த்தம். அதனால் பாஜக வளர்ந்து இருக்கிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இன்னும் வளரவில்லை.
திமுக, அதிமுக கட்சிகள் அண்ணாமலை தவிர பாஜகவில் உள்ள மற்ற தலைவர்களை புகழ்ந்து பேசுகிறார்கள். இதனால் என் மூலம் நான் பழைய தலைவர்களுக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்து உள்ளேன்.
மொடக்குறிச்சியில் கேந்திராலாயா பள்ளியில் கொண்டு வர நாங்கள் தாயாராக இருக்கிறோம் ஏன் அனுமதி கொடுக்கவில்லை. மத்திய அரசு கொடுப்பதற்கு தாயாராக இருந்தும் தமிழகத்தில் பள்ளி கட்டிடம் சரியில்லாத காரணத்தினால் நவோதயா, கேந்திரா போன்ற பள்ளிக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் காமராஜர் பெயரில் கூட மத்திய அரசு தமிழகத்தில் பள்ளி திட்டம் கொண்டு வர தயார் ஆனால் தமிழக அரசு அனுமதி கொடுக்குமா என கேள்வி எழுப்பினார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் விவகாரத்தில், முதல்வர் வலுத்து வருவது பழுக்கவில்லை என தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் வேறு எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
தந்தை ஸ்டாலினே மகனை ட்ரோல் செய்தால், நாங்கள் என்ன செய்வது என்றார். தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்த நடக்கிறது, அறிவுபூர்வமான அரசியல் நடந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்.
பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் மீது பல வருடத்திற்கு முன்பு புகார் கொடுத்து இருந்தார். பால் கனகராஜ் – ஆம்ஸ்ட்ராங் உறவு குறித்து விளக்கம் அளித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பால் கனகராஜ் விசாரணைக்கு அழைத்தது சரி தான், காவல்துறை அனைத்து வகையிலும் விசாரணை செய்வது வழக்கம் தான்.
கார் பந்தய சாலைக்கு 40 கோடி ரூபாய்வழங்கிய நிதியை, பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என தெரிவித்தார்.