அவதார் திரைப்படத்தின் 3-ம் பாகம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான Avatar: The Way of Water கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.
அவதார் திரைப்படத்தின் 3-ம் பாகத்திற்கு Avatar – Fire And Ash என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி திரைக்கு வருகிறது.