கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றங்கரையில் 12 அடி நீள முதலையை பொதுமக்களே பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றவர்களை முதலை கடித்து இழுத்துச் சென்றதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் காட்டுக் கூடலூரின் ஆற்றங்கரையோரத்தில் சுமார் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை படுத்திருந்துள்ளது.
இதனைக் கண்ட கிராம மக்கள் முதலையைப் பிடித்துச் செல்லுமாறு வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்களே பாதுகாப்பு உபகரணங்களின்றி முதலையைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.