ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீரவரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 26வது நாளாக தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.