சென்னையில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்ற புடவை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் தனியார் அமைப்புகள் சார்பில் புடவை மாரத்தான் போட்டி நடைபெற்றது.பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மராத்தான் ஓட்ட்ம் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, வழக்கறிஞர் ஆதிலட்சுமி, பெண் காவல் உயர் அதிகாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் நிகழ்ச்சியின் இறுதியில் பார்வையாளர்களுக்கும், மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த மாரத்தான் போட்டியில் சைபர் குற்றங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.