தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக முட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது தென்மலை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கேரள அதிகாரிகள் லாரிகளை தடுத்து நிறுத்தி முட்டை ஒன்றுக்கு 2 பைசா வரி கட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் ஓட்டுநர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த ஒரு முறை வரிவிலக்கு அளிப்பதாக கூறிய அதிகாரிகள் லாரிகளை அனுமதித்தனர்.