ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் தத்ரூபமாக படைத்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் தங்களது வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மூவர்ண கொடியுடன் பிரதமர் மோடி மற்றும் இந்திய வரைபடத்தை மணல் சிற்பமாக சுதர்ஷன் பட்நாயக் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.இதை பலரும் ஆர்வத்துடன் கண்டுரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.