பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 109 புதிய ரக பயிர்கள் ; அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி!
Aug 20, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 109 புதிய ரக பயிர்கள் ; அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 11, 2024, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர்  நரேந்திர மோடி  வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்தப் புதிய பயிர் வகைகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்தப் புதிய ரகங்கள் அதிக நன்மை பயக்கும் என்றும், அவை தங்கள் செலவைக் குறைக்க உதவும் என்றும், சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், மக்கள் எவ்வாறு சத்தான உணவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவது குறித்தும் பேசிய அவர், மக்கள் கரிம உணவுகளை உட்கொள்ளவும் கோரவும் தொடங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வேளாண் அறிவியல் மையங்களின் பங்களிப்பையும் விவசாயிகள் பாராட்டினர். ஒவ்வொரு மாதமும் உருவாக்கப்படும் புதிய இரகங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையங்கள் முன்கூட்டியே எடுத்துரைத்து அவற்றின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் புதிய பயிர் வகைகளை உருவாக்கியதற்காக விஞ்ஞானிகளையும் பிரதமர் பாராட்டினார். பயன்படுத்தப்படாத பயிர்களை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வர பிரதமர் அளித்த ஆலோசனைக்கு ஏற்ப தாங்கள் செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பிரதமர் வெளியிட்ட 61 பயிர்களில் 109 ரகங்களில்  34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் அடங்கும். வயல் பயிர்களில், சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார்ச்சத்து பயிர்கள்  மற்றும் பிற சாத்தியமான பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் விதைகள் வெளியிடப்பட்டன. தோட்டக்கலைப் பயிர்களில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் வெளியிடப்பட்டன.

Tags: prime minister narendra modidelhi109 high-yieldingclimate-resilient and bio-rich crop varietiesIndian Agricultural Research Institute
ShareTweetSendShare
Previous Post

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த டெல்லி பாஜக தலைவர் மீனாகாஷி லேகி!

Next Post

வயலில் நாற்று நட்டு, உழவுப் பணியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமி!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies