ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தரமற்ற முறையில் தார் சாலை போடப்பட்டதை கண்டித்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டாலங்குளம் கிராமத்தில் 1 புள்ளி 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த லேசான மழையில் தார் சாலை முழுவதுமாக தண்ணீரில் கரைந்து சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்பட்டிருப்பதை கண்டித்து தலையில் முக்காடு அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.