இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் பிரச்னைகள் இன்றி ஆசியாவின் முக்கிய மையமாக இந்தியா திகழ்வதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வினோஜ் பி.செல்வம், காங்கிரஸ் கட்சியினர் நாட்டிற்கு நேர்மையாக இருந்ததில்லை என்றும், இந்தியாவை துண்டாட நினைக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
கேரள அரசு லாட்டரி விற்பனை உள்ளிட்ட பிற விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர், பிரதமரின் உத்தரவின்பேரில் ராணுவம் விரைந்து செயல்பட்டதால் வயநாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.