“தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும்” எனவும், “தங்கலான் நமது வரலாறு என அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும்” என்றும் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில், நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விக்ரம், ” வாய்ப்பு கிடைத்தால் காதல் கதை தொடர்பான படங்களின் நடிப்பேன்” என்றார்.