தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மின்னல் தாக்கி 18 ஆடுகள் உயிரிழந்தன. கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் மாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
கயத்தார் பகுதியில் மின்னல் தாக்கியதில் 18 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் மழையின் போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த துரைப்பாண்டி என்பவர் மின்னல் தாக்கி மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கயத்தார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.