விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கனமழை காரணமாக பூமீஸ்வரர் கோவிலில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவில் முறையாக பாராமரிக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கனமழையால், கோவில் முழுவதும் தண்ணீர் தேங்கியதால், பக்தர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.