நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக ரூபேஸ்குமார் மீனா பதவி ஏற்றுக் கொண்டார்.
முன்னர் நெல்லை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றிய மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து நெல்லை காவல் ஆணையராக ரூபேஸ்குமார் மீனா நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே ஏற்படும் சாதிய மோதலைத் தடுக்கும் வகையில், கல்வித்துறையுடன் இணைந்து குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.