கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தரமற்ற முறையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் அம்ருத் திட்டத்தின் மூலம் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர்த்தேக்க கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக திமுக வார்டு செயலாளர் செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கோட்டூர் திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன் ஒப்பந்தாரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.