நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மத்திய சுகாதார துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக கேரள எல்லையான புளியரையில் சுகாதாரத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.