கள்ளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் தாயே மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 7 வயது மகள் இரு தினங்களுக்கு முன்பு மாயமானர்.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி அவரது தாய் சத்யாவுடன் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சத்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 5 லட்சம் ரூபாய் கடனை அமாவாசைக்குள் தருவதாக கடன் வழங்கியவர்களிடம் சத்யா கூறியது தெரியவந்தது.
மகளை கொன்றுவிட்டால், துக்க வீட்டில் பணம் கேட்கமாட்டார்கள் என்று எண்ணி, மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சத்யா போலீசார் சத்யாவை கைது செய்தனர்.