மஞ்சளாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கும் வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் நல்ல மழை பெய்தது.
இதனால் ஜூன் 20ஆம் தேதி அணை முழு கொள்ளவை எட்டியது. கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்த நிலையில் மஞ்சளார் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் அணக்கு வரும் நீரின் அளவு 50 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.