உகாண்டாவில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஐ தாண்டியது.
தலைநகர் கம்பாலாவில் இடியுடன், கூடிய பலத்த மழை பெய்தது. இதனைதொடர்ந்து குப்பை கிடங்கில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ஏராளமானோர் சிக்கிய நிலையில் 20-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.