அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவலை அவரது மகன் சஜீப் ஜாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்கா சதி செய்ததும், தனக்கு மட்டும் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால், நாட்டு மக்களுக்கு அதைத் தெரியப்படுத்தியிருப்பேன் என ஷேக் ஹசீனா தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
வங்கதேசத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செயின் மார்ட்டின் தீவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் ஒப்படைத்து, வங்கக் கடலில் ஆதிக்கம் செலுத்த அந்நாட்டை அனுமதித்திருந்தால், தாம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவலை அவரது மகன் சஜீப் ஜாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் ஜாய் விளக்கமளித்துள்ளார்.